search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரி கொலை"

    தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே வீடு கட்ட பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே உள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 55) கூலி தொழிலாளி.

    இவருக்கு அமரா(48) என்ற மனைவியும், சத்யா (30) என்ற மகளும், முருகன்(28), ஞானமூர்த்தி (25), கேசவன் (19) உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர்.

    இதில் கட்டிட மேஸ்திரியான முருகன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வருகிறார். கட்டுமான செலவு அதிகரித்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தந்தையிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.

    அப்போது தந்தை மகனுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னிடம் பணம் இல்லை என்றும், இருந்தாலும் கொடுக்க முடியாது என்றும் தந்தை சரவணன் மறுத்து உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் கோபத்தில் தன்னுடைய தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்த சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
    தருமபுரியை சேர்ந்த கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு:

    தருமபுரியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது44). இவரது மனைவி கவிதா (37) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனிவேல் பெங்களூருவில் கார் டிரைவராக பணியாற்றினார். பெங்களூரு சந்திராநகர் லே-அவுட் அருந்ததிநகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு மீண்டும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து விட்டு அவர் தூங்கி விட்டார். தினம் தினம் தகராறு செய்யும் அவருடன் வாழ்வதை விட அவரை கொன்று விடுவதே மேல் என்று நினைத்து அவரது மனைவியும், மகன்களும் அவரது கழுத்தை நெறித்து கொன்று விட்டனர்.

    நேற்று காலை அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததாக கூறிய அவரது குடும்பத்தினர் அவரது உடலை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அவரது உடலை பரிசோதித்த தனியார் ஆஸ்பத்திரி அவர் இறந்து பல மணி நேரம் ஆனதை கண்டுபிடித்து விட்டார். உடலை எடுத்து செல்லுமாறு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறி விட்டது.

    பின்னர் கவிதாவும், அவரது மகன்களும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பழனிவேலின் உடலை தருமபுரிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அவரது வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் இது குறித்து சந்திராநகர் லே-அவுட் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பழனிவேல் பிணத்தை கைப்பற்றி விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அங்கு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் பழனிவேலின் மனைவி மற்றும் மகன்களை போலீசார் விசாரித்தபோது அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். #Tamilnews

    ×